உலக கோப்பை கிரிக்கெட் இந்தியாவின் பாய்ச்சல் தொடருமா..? - இன்று நியூசி.யுடன் அரையிறுதி

Advertisement

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இந்தத் தொடரில் தொடர்ந்து சாதித்து வரும் இந்தியப் படை இந்தப் போட்டியிலும் தனது பாய்ச்சலை தொடரும் என எதிர்பார்க்கலாம்.

உலக கோப்பை லீக் சுற்று ஆட்டங்களில் அபார திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி, பட்டியலில் முதலிடம் பிடித்து கெத்தாக அரையிறுதிக்கு முன்னேறி விட்டது.லீக் சுற்றில் 7 போட்டியில் வென்று, இங்கிலாந்திடம் மட்டுமே தோல்வியை தழுவியது.லீக் சுற்றில் நியூசிலாந்து அணியுடனான போட்டி மழையால் ரத்து ஆன நிலையில், இன்று அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்தத் தொடரில் லீக் சுற்று ஆட்டங்களின் ஆரம்பத்தில், இலங்கை, வங்கதேசம், ஆப்கன், தெ.ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை வரிசையாக பந்தாடிய நியூசிலாந்து, கடைசி 3 போட்டிகளில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளிடம் தோல்விச் சந்தித்த சோகத்தில் உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் தட்டுத் தடுமாறித்தான் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்யை நியூசி.பெற முடிந்தது. இந்த தோல்விகளால் மனதளவில் நியூசி. வீரர்கள் சோர்ந்து போய் உள்ளனர். இதனால் இன்றைய போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து தனது திறமையை நிரூபிக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

ஆனால், இந்திய அணி வீரர்களோ, வெற்றிமேல் வெற்றி பெற்ற உற்சாகத்தில்
இன்று மான்செஸ்டரில் நடைபெறும் அரையிறுதியில் களமிறங்குகின்றனர். ரன் குவிப்பில் சாதனை மேல் சாதனை படைத்து வரும் ரோகித் சர்மா, இன்றும் சாதனையை தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம். அவருக்கு லோகேஷ் ராகுலும் முதல் விக்கெட்டுக்கு பக்கபலமாக உள்ளார். பேட்டிங்கில் கேப்டன் கோஹ்லியும், சதமடிக்காவிட்டாலும், 5 அரைசதம் அடித்து தொடர்ந்து திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

பாண்ட்யாவும் அவ்வப்போது அதிரடி காட்டுவது இந்தியாவுக்கு கூடுதல் பலம் தான். ஆனால் 4-வது வீரராக களமிறங்குபவர்கள் தான் இன்னும் திறமையை வெளிப்படுத்த தடுமாறுகின்றனர். ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்கள் திறமையை இன்று நிரூபிக்க வேண்டும். பந்து வீச்சைப் பொறுத்தவரை சுழல் பந்து வீச்சாளர்கள் கை கொடுக்காவிட்டாலும், வேகத்தில் பும்ரா, சமி, புவனேஷ்வர் ஆகியோர் மிரட்டல் பார்மில் உள்ளனர். பாண்ட்யாவும் அசத்துகிறார்.

இதனால் பேட்டிங்குக்கு சாதகமான மான்செஸ்டர் மைதானத்தில் இந்திய அணி இன்றும் சாதித்து, இறுதிப்போட்டிக்கு விறுவிறுவென முன்னேறும் என எதிர் பார்க்கப்படுகிறது. உலக கோப்பை போட்டிகளில் இந்தியா, நியூசிலாந்து அணிகளின் பெர்மான்ஸ் என்று எடுத்துக் கொண்டாலும் எல்லாமே இந்தியாவுக்கு சாதகமாகத் தான் உள்ளது. இதுவரை நடந்துள்ள உலக கோப்பை தொடர்களில் 6 முறை இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்று, 3 முறை பைனலுக்கு முன்னேறி 2 முறை கோப்பை வென்றுள்ளது. ஆனால் நியூசிலாந்தோ, 7 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும், கடந்த 2015-ல் மட்டும் ஓரே முறை தான் பைனலுக்கு முன்னேறி அதிலும் தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
/body>