ஸ்மார்ட்போனை கண்காணிப்பு காமிராவாக பயன்படுத்துவது எப்படி?

Advertisement

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருப்பதை பெரும்பாலும் எக்சேஜ் செய்கிறோம். மிகக்குறைந்த மதிப்பிலேயே அதை திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். பலர் பழைய ஸ்மார்ட்போன்களை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள்.

தற்போது விற்பனைக்கு வரும் எல்லா ஸ்மார்ட்போன்களிலுமே நல்ல தரமான காமிரா, அதிகமான சேமிப்பளவு மற்றும் அதிக மின்னாற்றலை சேமிக்கக்கூடிய மின்கலம் (பேட்டரி) ஆகியவை உள்ளன. ஸ்மார்ட்போன்களை வீட்டில் கண்காணிப்பு காமிராவாக பயன்படுத்த முடியும். ஆகவே, ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட பழைய ஸ்மார்ட்போன்களை குறைந்த விலைக்கு கொடுப்பதைக் காட்டிலும் வீட்டில் கண்காணிப்பு காமிராவாக பயன்படுத்துவது சிறந்தது.

கண்காணிப்புக்கு பயன்படுத்துவதற்காக அநேக செயலிகள் கிடைக்கின்றன. ஆனால், எல்லாமே எதிர்பார்ப்புக்கேற்றபடி செயல்படுவதில்லை. கூகுள் பிளே பாதுகாப்புடன் கூடிய ஆல்ஃபிரட் காமிரா (Alfred Camera App) என்ற செயலி, இவ்வகை பயன்பாட்டுக்கு பேர் பெற்றதாகும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான வேறு செயலிகளையும் நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

ஆல்ஃபிரட் காமிரா செயலியை பயன்படுத்தி இன்னொரு ஸ்மார்ட்போனில் நீங்கள் வீட்டில் நடப்பதன் நேரடி காட்சியை (live feed) காணலாம்; வேறு கணினி மூலமும் பார்க்கலாம்.

தேவையானவை:

காமிராவாக பயன்படுத்தப்பட இருக்கும் பழைய ஸ்மார்ட்போனில் 4ஜி அலைக்கற்றை தரமுள்ள தொடர்பு இருக்கவேண்டும் அல்லது வீட்டில் வைஃபை வசதி இருக்கவேண்டும்.
ஸ்மார்ட்போன் இயக்கம் தடைபடாமல் இருக்க மின்சார வசதி அல்லது மின் தேக்க (Power Bank) இருக்க வேண்டும்.

இந்தப் பயன்பாட்டுக்கென பிரத்யேகமாக ஒரு ஜிமெயில் கணக்கை தொடங்க வேண்டும். இதுபோன்ற செயலிகளில் உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துவது ஏற்றதல்ல.

செயல்முறை:

பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஃபேக்டரி ரீசெட் என்ற முறையில் சுத்தம் செய்யவும். ஆல்ஃபிரட் காமிரா செயலியை தரவிறக்கம் செய்து, காமிராவாக இயங்க இருக்கும் ஸ்மார்ட்போனை 'இந்த சாதனத்தை இம்முறையில் பயன்படுத்துகிறேன்' (I use this device as) என்ற தெரிவில் 'காமிரா' (Camera) என்று தெரிவு செய்யவும்.

இதற்கென உருவாக்கிய பிரத்யேக ஜிமெயில் கணக்கை கொண்டு உள்நுழையவும் (sign-in). இப்போது பழைய ஸ்மார்ட்போன், கண்காணிப்பு காமிராவாக பயன்படுத்தப்பட தயாராகி விட்டது.

இக்காமிராவில் தெரிவதை நேரடியாக பார்ப்பதற்கு, வேறொரு ஸ்மார்ட்போனிலும் ஆல்ஃபிரட் காமிரா செயலியை தரவிறக்கம் செய்யவும். அங்கு 'இந்த சாதனத்தை இம்முறையில் பயன்படுத்துகிறேன்' (I use this device as) என்ற தெரிவில் 'பார்வையிடுபவர்' (viewer) என்று தெரிவு செய்யவும். இப்போது கையிலுள்ள ஸ்மார்ட்போனில் வீட்டில் நடப்பவற்றை நேரடியாக காண முடியும்.

வேறொரு கணினியில் பார்க்க விரும்பினால் கூகுள் பிரௌசரில் alfred.computer என்ற இணையதளத்திற்கு சென்று, போனில் பயன்படுத்திய அதே ஜிமெயில் கணக்கை கொண்டு உள்நுழையவும்.

ஸ்மார்ட்போன் அல்லது கணினி ஏதாவது ஒன்றில்தான் நீங்கள் நேரடி காட்சியை காண இயலும்.

கட்டணமில்லாத வடிவில் காட்சியின் தரம் குறைவாக இருக்கும். எல்லா கண்காணிப்பு காமிரா செயலிகளை போன்றே இதற்கும் சந்தா உண்டு. ஓராண்டுக்கான சந்தாவில் மாதந்தோறும் ரூ.178 செலுத்தக்கூடிய பிரிவு உள்ளது. மாதக் கணக்கில் மட்டுமெனில் ரூ.285 ரூபாயிலிருந்து சந்தா உள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு ஆபத்தா? வருகிறது ஹார்மனி!

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
/body>