எப்படி இருக்கிறது நோக்கியா 7.2 மற்றும் 6.2 ஸ்மார்ட்போன்கள்?

Nokia 6.2 and 7.2 smartphones are launched

by Mari S, Sep 7, 2019, 08:37 AM IST

நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்களான நோக்கியா 7.2 மற்றும் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்கள் பெர்லினில் நடந்த ஐ.எப்.ஏ தொழில்நுட்ப கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

பின்புறத்தில் 3 கேமராக்களுடன் அதிநவீன ஸ்மார்ட் அம்சங்களை கொண்டு உருவாகியுள்ள இந்த மொபைல் போனில், கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் செயல்படுகிறது. மேலும், 3,500எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்டு அட்டகாசமாக இயங்குகிறது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.

நோக்கியா 6.2 ஐரோப்பாவில் 199 யூரோக்களுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 15,800 ரூபாய் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறைவான விலையில் 3 பின்பக்க கேமராக்களுடன் ஹை-ஸ்டைலாக வெளியாகியுள்ள இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள், விரைவில் இந்தியாவிலும் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

கருப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் தயாராகி உள்ள இந்த நோக்கியா வகை ஸ்மார்ட் போன்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விலை 249 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 20 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 636 எஸ்.ஓ.சி ப்ராசஸர் என பல புதுமைகளை கொண்டு களமிறங்கவுள்ள இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள், மார்க்கெட்டில் நோக்கியா விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டு வருகிறதாம்.

You'r reading எப்படி இருக்கிறது நோக்கியா 7.2 மற்றும் 6.2 ஸ்மார்ட்போன்கள்? Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை