ப்ரீபெய்ட் சிம் பயன்பாட்டிலும், குறைந்த விலையில் இன்டர்நெட் பயன்பாட்டிலும் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஜியோ. ஆனால், சமீப காலங்களில் ஜியோ சிம்களில் சிக்னல் சரிவர இருப்பதில்லை என்ற புகார் இருந்தது. இதை நிவர்த்தி செய்வதற்காக சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து இணைய சேவையை மேம்படுத்தப் போகிறது ஜியோ.
இன்டெர்நெட் ஆஃப் திங்ஸ் என்று சொல்லப்படும் IoT நெட்வொர்க்ஸை இந்தியா முழுவதும் சாம்சங் நிறுவனத்தின் உதவியுடன் நிறுவப் போகிறது ஜியோ. இதன் மூலம் 99 சதவீத இந்திய மக்கள் தொகையை தங்களால் அடைய முடியுமென்று இரு நிறுவனங்களும் நம்புகின்றன.
இந்த முன்னெடுப்பு குறித்து ஜியோ நிறுவனம் சார்பில், `இன்டர்நெட் வசதி எல்லோருக்கும் கிடைக்கும் வகையிலும் குறைந்த விலையில் கிடைக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கூறியுள்ளது.
சாம்சங் நிறுவனம், `ஜியோவின் அசுர வளர்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்வது மகிழ்ச்சி. இந்தத் திட்டத்தின் மூலம் ஜியோ பயனர்களுக்கு சிறந்த இணைய சேவையை எங்களால் வழங்க முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறது.