ரியல்மீ 6ஐ: இன்று முதல் சிறப்பு விற்பனை

Realme 6i sale from today

by SAM ASIR, Aug 20, 2020, 11:21 AM IST

48 எம்பி ஆற்றல் கொண்ட பின்பக்க காமிரா மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி ஆக்டோகோர் பிராசஸர் கொண்ட ரியல்மீ 6ஐ மொபைல் போனின் சிறப்பு விற்பனை, ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ இணையதளத்தில் இன்று நண்பகல் 12 முதல் நடைபெறுகிறது.

சிறப்பம்சங்கள்:

6.5 அங்குல FHD பஞ்ச்ஹோல் திரை; 2400X1080 திறன்; கொரில்லா கிளாஸ்; 90 Hz அல்ட்ரா மென்திரை
முன்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல்; 120fps வீடியோ பதிவு
பின்பக்க காமிரா: 48 எம்பி ஆற்றல் கொண்ட முதனிலை காமிரா; 8 எம்பி ஆற்றல் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ்; 2 எம்பி ஆற்றலுடன் கறுப்பு - வெள்ளை போர்ட்ரெய்ட் லென்ஸ்; 2 எம்பி ஆற்றலுடன் மேக்ரோ லென்ஸ்
பின்பக்கமுள்ள குவாட் காமிரா, நைட்ஸ்கேப் 2.0 தொழில்நுட்பம் கொண்டது.
மின்கலம்: 4,300 mAh ஆற்றல்
பயனரின் விரல்ரேகையை (finger sensor) கடவுச்சொல்லாகப் பயன்படுத்தலாம்

விலையும் சலுகைகளும்:
4 ஜிபி இயக்க ஆற்றலும் 64 ஜிபி சேமிப்பு திறனும் கொண்ட தயாரிப்பு ரூ.12,999/- ரூபாய்க்கும், 6 ஜிபி இயக்க ஆற்றல் கொண்ட தயாரிப்பு ரூ.14,999/- ரூபாய்க்கும் கிடைக்கும். சேமிப்பு திறனை 256 ஜிபி வரை கூடுதலாக்கிக் கொள்ளலாம்.
2020 ஆகஸ்ட் 20 விற்பனையில் எஸ்பிஐ கடன் அட்டைதாரருக்கு 5% கேஷ்பேக்; ஆக்ஸிஸ் வங்கிக் கடன் அட்டைதாரருக்கு 5% தள்ளுபடி ஆகிய சலுகைகள் உள்ளன. ரியல்மீ 6ஐ மொபைல் போனை, ரூ.1,445 மாதாந்திர தவணையிலும் வாங்கலாம்

You'r reading ரியல்மீ 6ஐ: இன்று முதல் சிறப்பு விற்பனை Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை