இனி தொலைந்து போன மொபைலை எளிதாக கண்டுபிடிக்கலாம்..சாம்சங்கின் சூப்பர் அப்டேட்…!

Samsung Add New Feature In Find My Mobile

by Loganathan, Aug 25, 2020, 15:43 PM IST

சாம்சங்க் Find My Mobile என்றொரு செயலியை வைத்திருக்கிறது. இந்த செயலி மொபைல் தொலைந்து போனால் அது எங்கு இருக்கிறது என்று மேப்பில் காண்பிக்கவும், மொபைலில் உள்ள தகவல்களை அழிக்கவும் , பேக்கப் எடுக்கவும் உதவும். ஆனால் இந்த செயலி இயங்குவதற்கு இணைய இணைப்பு இருப்பது அவசியம். அதாவது உங்கள் தொலைந்து போன மொபைலில் இண்டெர்நெட் வசதி இருந்தால்தான் மேற்கொண்ட வசதிகள் இயங்கும். இணைய இணைப்பு இல்லாமல் இந்த செயலி இயங்காது என்பது பெரும் குறையாக இருந்தது . ஒருவேளை மொபைல் திருடு போனால், திருடியவர்கள் முதலில் செய்வது இணைய இணைப்பைத் துண்டிப்பதுதான்.



இந்த பிரச்சனையைதான் இப்போது சரி செய்து இருக்கிறது சாம்சங். Find My Mobile செயலில் கூடுதல் வசதிகளை செய்து புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த அப்டேட்டின்படி இனி உங்கள் மொபைலில் இணைய இணைப்பு இல்லை என்றாலும் இந்த செயலி இயங்கும் என்பதுதான் Find My Mobile செயலில் சிறப்பம்சம். இண்டெர்நெட் இல்லை என்றாலும் தொலைந்து போன உங்கள் மொபைல் எங்கு இருக்கிறது என்று மேப்பில் காண்பிக்கும், மொபைலில் உள்ள தகவல்களை அழிக்கவும் , பேக்கப் எடுக்கவும் உதவும்.


இந்த புதிய வசதியை xda-developers இல் பணிபுரியும் ஒருவர் கண்டறிந்து இதனை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.




இந்த புதிய வசதி நீங்கள் செயலியை அப்டேட் செய்யும் போது உங்களுக்கும் காண்பிக்கும் .

You'r reading இனி தொலைந்து போன மொபைலை எளிதாக கண்டுபிடிக்கலாம்..சாம்சங்கின் சூப்பர் அப்டேட்…! Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை