விவோ ஒய்20: ஆகஸ்ட் 28 முதல் விற்பனை

by SAM ASIR, Aug 27, 2020, 12:43 PM IST

விவோ நிறுவனம் ஒய்-வரிசை மொபைல் போன்களில் புதிதாக விவோ ஒய்20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மே மாதம் விவோ வி19 ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. 4ஜிபி + 128 ஜிபி மற்றும் 8ஜிபி+256 ஜிபி என்று இருவகையாகக் கிடைக்கும் இந்த போன்களின் விலையில் விவோ நிறுவனம் ஏறத்தாழ ரூ.4,000/- அளவுக்குக் குறைத்துள்ளது. ஆகவே தற்போது இந்த போன்கள் முறையே ரூ.24,990/- மற்றும் ரூ.27,990/- விலையில் கிடைக்கிறது.இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ ஒய்20 ஸ்மார்ட் போனுக்கு ரூ.12,990/- விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவோ ஒய்20, ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

விவோ ஒய் 20 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்:

தொடுதிரை : 6.51 அங்குலம் ஹெச்டி; 720X1600 தரம்

இயக்கவேகம்: 4 ஜிபி

சேமிப்பளவு : 64 ஜிபி (எஸ்டிகார்டு மூலம் கூடுதல் சேமிப்பு வசதி)

பின்புற காமிரா: 13 எம்பி ஆற்றல்; 2 எம்பி ஆற்றல்; மேக்ரோ சென்ஸார் மற்றும் 2 எம்பி ஆற்றல்; டெப்த் சென்ஸார் என்று மூன்று காமிராக்கள்

முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்

பிராசஸர்: ஆக்டோகோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 460

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 மற்றும் விவோவின் ஃபன்டச் 10.5

மின்தேக்க திறன்: 5000 mAh விரல்ரேகை உணரி (fingerprint sensor), 4 ஜி, VoLTE, வைஃபை, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் அடங்கியது.

You'r reading விவோ ஒய்20: ஆகஸ்ட் 28 முதல் விற்பனை Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை