ஸூம் செயலி: வகுப்பறை அனுபவத்தை மேம்படுத்த புதிய வசதிகள்

Zoom Processor: New features to enhance the classroom experience

by SAM ASIR, Aug 28, 2020, 13:07 PM IST

வகுப்பறை போன்று மெய் நிகர் வகுப்பறையை இருக்கைகளோடு பயனர்கள் உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக ஸூம் செயலி தெரிவித்துள்ளது. கூட்டம், வகுப்பு, கருத்தரங்கம் போன்றவற்றை இணையவழியில் நடத்துவதற்கு ஸூம் செயலி (Zoom) உதவுகிறது. கொரோனா காரணமாகக் கல்லூரி, பள்ளி வகுப்புகள் மற்றும் அமைப்புகளின் கூட்டங்கள், கருத்தரங்கள் நேரடியாக நடத்தப்பட இயலாத நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக ஸூம் போன்ற செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

ஒன்பது பேர் குழு

வகுப்பினை நடத்தும் ஆசிரியர் ஒன்பது வரைக்குமான எண்ணிக்கையில் மாணவர்களைத் தெரிவு செய்து கவன ஈர்ப்பு குழுவை (group view) அமைத்துக் கொள்ளலாம். வகுப்பறையில் காட்சிப்படுத்தும் (presenting) மாணவர்களை இவ்வாறு வகைப்படுத்த முடியும்.

அரங்க பார்வை

பயனர்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கும் வரிசையின்படி பங்கேற்பாளர்களை அரங்க பார்வையில் (Gallery View) சேர்க்கலாம். இதற்கு drag and drop முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் புதிதாக ஒருவர் கூட்டத்தில் பேசும்போது அல்லது உள்ளே நுழையும்போது பங்கேற்பாளர் அரங்கில் மாற்றம் ஏற்படாது.வகுப்பினை நடத்தும் ஆசிரியர் தன் வசதிக்கேற்ப பல்வகை அரங்குகளைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். மெய்நிகர் (virtual) இருக்கை வரைபடத்தின் அடிப்படையில் பல அரங்குகளை உருவாக்கலாம்.

பலருடன் இணைப்பு

ஸூம் செயலியில் பலருடன் இணையக்கூடிய (multi-pinning) வசதியும் வருகிறது. இதன் மூலம் பயனர், மற்ற பயனர்களுடன் (அதிகபட்சமாக ஒன்பது பேர்) தங்கள் தனிப்பட்ட பார்வை நோக்கில் இணைந்து கொள்ளலாம். செவித்திறன் அற்றோர், செவித்திறன் குறைவுடையோர், ஆசிரியருடன் சைகை மொழிபெயர்ப்பாளரையும் இணைத்து பயன் பெறலாம். இதன் மூலமாக கற்றால் அனுபவம் மேம்படும்.

ஒலியமர்த்தல்

குறிப்பிட்ட மாணவர்களின் ஒலியினை அமர்த்துவதற்கு (mute) ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கும் வசதியையும் ஸூம் வழங்குகிறது. கூட்டத்தை நடத்துபவரும் பங்கேற்பாளர்களும் ஒலி கட்டுப்பாட்டு அனுமதியைத் தெரிவு செய்தால் கூட்டத்தை நடத்துபவர், தேவைப்படுபவர்களின் ஒலியை அமர்த்த முடியும். மாணவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே ஆசிரியர் இவ்வசதியைப் பயன்படுத்த முடியும்.

அசல் ஒலி

ஒலியைத் தெளிவாகக் கேட்கும்படி அசல் ஒலி (Original Sound) என்றொரு வசதியையும் ஸூம் தருகிறது. ஒலியின் தரத்தை மேம்படுத்துவதாகவும் அதன் மூலம் இசை கல்வி மற்றும் நிகழ்த்து செயல்பாடுகளுக்கும் ஸூம் உதவ முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

You'r reading ஸூம் செயலி: வகுப்பறை அனுபவத்தை மேம்படுத்த புதிய வசதிகள் Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை