ஸ்வைவெல் மோடு என்னும் முதன்மை மற்றும் இரண்டாம் திரைகளை பயன்படுத்தக்கூடிய வசதியுடன் எல்ஜி நிறுவனம் எல்ஜி விங்க் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன் நவம்பர் 9ம் தேதி முதல் இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது.
எல்ஜி விங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
சிம்: இரட்டை சிம் (நானோ)
தொடுதிரை: 6.8 அங்குலம் (முதன்மை திரை) எஃப்எச்டி+ 1080X2460 பிக்ஸல்; 20.5:9 விகிதாச்சாரம்
3.9 அங்குலம் (இரண்டாம் திரை) எஃப்எச்டி+ 1080X2460 பிக்ஸல் தரம்; 1.15:1 விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 8 ஜிபி
சேமிப்பளவு : 128 ஜிபி (2டிபி வரை அதிகரிக்கும் வசதி)
முன்புற காமிரா: 32 எம்பி ஆற்றல் (பாப்அப்)
பின்புற காமிரா: 64 எம்பி + 13 எம்பி+ 12 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள் (ஹெக்ஸா மோஷன் ஸ்டெபிலைசர் கொண்டது)
பிராசஸர்: ஆக்டா-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 756ஜி
மின்கலம்: 4000 mAh ஆற்றல்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
5ஜி, 4ஜி எல்டிஇ-ஏ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1 உள்ளிட்ட வசதிகள் கொண்டது.
நவம்பர் 9ம் தேதி முதல் எல்ஜி விங் ஸ்மார்ட்போன் ரூ.69,990/- விலையில் கிடைக்கும்.