வருகிறது வாட்ஸ்அப் பே

by SAM ASIR, Nov 6, 2020, 13:20 PM IST

கூகுள் பே, போன்பே போன்று வாட்ஸ்அப் நிறுவனம், 'வாட்ஸ்அப் பே' என்ற பணப்பட்டுவாடா செயலி சேவையை ஆரம்பிக்க இருக்கிறது. தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்பிசிஐ) அதற்கான அனுமதியை அளித்துள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த ஓர் அறிக்கை இந்த ஆண்டு மே மாதம் 'வாட்ஸ்அப் பே' அறிமுகம் செய்யப்படக்கூடும் என்று கூறியிருந்தது. சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தனக்கிருக்கும் பெரிய பயனர் வட்டத்தினை நாட்டின் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு விரிவாக்க தவறாக பயன்படுத்துகிறது என்று போடப்பட்ட வழக்கினை இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) தள்ளுபடி செய்தது.

முதலில் அதிகபட்சமாக யூபிஐயில் (UPI) பதிவு செய்துள்ள 2 கோடி பயனர்கள் அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. 2021 ஜனவரி முதல் மூன்றாம் நபர் செயலிகள் ஒட்டுமொத்த பரிமாற்றத்தில் அதிகபட்சமாக 30 சதவீத அளவு பயனர்களையே கொண்டிருக்கமுடியும். தற்போது 25 கோடி பயனர்களை எட்டியிருப்பதாக கூறும் போன் பே போன்ற நிறுவனங்களுக்கு இந்த விதி எதிர்காலத்தில் தடையாக அமையக்கூடும். வாட்ஸ்அப் பே இந்தியாவில் விரைவில் அதாவது தீபாவளி காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 40 கோடி பயனர் வட்டம், அந்நிறுவனத்தின் டிஜிட்டல் பரிவர்த்தனை செயல்பாட்டில் மிகப்பெரிய ஆதாரமாக அமையும் என்று கருதப்படுகிறது.

More Technology News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை