கிரிகீ நிறுவனத்தின் ஆகுமெண்டட் ரியலிட்டி கேம் 'யாத்ரா' ஆகும். ஆக்சன் அட்வெஞ்சர் கதையைக் கொண்ட யாத்ராவில் பயனர்கள் மான்ஸ்டர் ஆர்மியை தோற்கடிக்கும் விளையாட்டை விளையாட முடியும். வில், அம்பு, சக்கரம், மின்னல் ஆகியவற்றைக் கொண்டு எதிரிகளைத் தாக்க முடியும். பயனர்கள் தங்கள் கேம்பிளேவை முடித்த பிறகு நண்பர்களுடன் தனி வீடியோவை பகிர முடியும்.
பயனர்கள், மற்ற பயனர்கள் பகிர்ந்த கேம்பிளே வீடியோவை பார்க்க முடியும். மறுபடியும் விளையாட ஆரம்பிக்கும் முன்பு வில்லையும் அம்பையும் பயன்படுத்தி டிஜிட்டல் பயிற்சி எடுக்க முடியும். ஜியோ பயனர்கள், முப்பரிமாண அவதார வசதியையும், கூடுதல் ஆயுதங்களையும் வலிமையையும் பயன்படுத்தக்கூடிய கேம்பிளே டோக்கன்களையும் பெறலாம்.
ஆகுமெண்டட் ரியாலிட்டியை பயன்படுத்துமாறு ஊக்குவிக்கக்கூடிய கேம் இது. யாத்ராவின் மூலம் இதைப் பயன்படுத்துவதற்கு ஜியோ பயனர்கள் மற்றும் ஜியோ பயனர் அல்லாதவர்களையும் வரவேற்கிறோம் என்று ஜியோ நிறுவன இயக்குநர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். கிர்கீ ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் கட்டணமின்றி கிடைக்கிறது.