செல்ஃபி எடுக்க 44 எம்பி காமிராவுடன் விவோ வி20 அறிமுகம்

by SAM ASIR, Dec 24, 2020, 17:52 PM IST

விவோ நிறுவனம் விவோ வி20 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது அது அமேசான் இந்தியா இணையதளம் மூலம் விற்பனையாகிறது.மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலோடி வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் சேமிப்பளவை 1 டிபி வரை கூடுதலாக்கும் வசதி உள்ளது.

விவோ வி20 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.44 அங்குலம்; எஃப்எச்டி+; 2400X1080 பிக்ஸல் தரம்
இயக்கவேகம்: 8 ஜிபி
சேமிப்பளவு : 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி மூலம் 1 டிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்)
முன்புற காமிரா: 44 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 730ஜி
இயங்குதளம் : ஃபன்டச் ஓஎஸ் 11; ஆண்ட்ராய்டு 11 (அடிப்படை)
மின்கலம்: 4000 mAh

விவோ வி20 (2021) ஸ்மார்ட்போன் ரூ.24,990/- விலையில் கிடைக்கும்.

More Technology News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை