குவாட் மற்றும் டிரிபிள் காமிராக்கள்: போகோ எம்2 மற்றும் சி3 ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்பு...!

by SAM ASIR, Jan 6, 2021, 20:03 PM IST

ஸோமி நிறுவனத்தின் முன்னாள் துணை நிறுவனமான போகோ (POCO) இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை நிரந்தரமாகக் குறைத்துள்ளது.

போகோ எம்2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.53 அங்குலம் எஃப்எச்டி+; 2340X1080 பிக்ஸல் தரம்
இயக்கவேகம்: 6 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி
முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல் f/2.0
பின்புற காமிரா: 13 எம்பி + 8 எம்பி + 5 எம்பி + 2 எம்பி (குவாட் காமிரா)
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ ஜி80
மின்கலம்: 5000 mAh

போகோ எம்2 விலை குறைப்பு:

முன்பு ரூ.10,999/- விலையில் விற்பனையான போகோ எம்2 வகையில் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட ஸ்மார்ட்போன் தற்போது ரூ.1,000/- குறைக்கப்பட்டு ரூ.9,999/- விலையில் கிடைக்கிறது. போகோ எம்2 வகையில் 128 ஜிபி சேமிப்பளவு கொண்ட ஸ்மார்ட்போன் தற்போது ரூ.1,500/- குறைக்கப்பட்டு ரூ.10,999/- ரூபாய்க்கு விற்பனையாகிறது.

போகோ சி3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.53 அங்குலம் எஃப்எச்டி+; 1600X720 பிக்ஸல் தரம்
இயக்கவேகம்: 3 ஜிபி மற்றும் 4 ஜிபி
சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி
முன்புற காமிரா: 5 எம்பி ஆற்றல் f/2.2
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (டிரிபிள் காமிரா)
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ ஜி35
மின்கலம்: 5000 mAh

போகோ சி3 விலை குறைப்பு:

போகோ சி3 ஸ்மார்ட்போனில் 3 ஜிபி மற்றும் 32 ஜிபி வகையானது விலையில் ரூ.1,000/- குறைக்கப்பட்டு ரூ.7,499/- ரூபாய்க்கும் 4 ஜிபி மற்றும் 64 ஜிபி கொண்ட ஸ்மார்ட்போன் விலையில் ரூ.500/- குறைக்கப்பட்டு ரூ.8,499/- ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

More Technology News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை