ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறீர்களா? மியூஐ அப்டேட் வருகிறது

by SAM ASIR, Feb 9, 2021, 16:27 PM IST

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. அப்போது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையில் மியூஐ (MIUI)உடன் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 ஆக மேம்படுத்தப்பட்டது (அப்டேட்). கடந்த மாதம் ஸோமி நிறுவனம் ரெட்மி 8, ரெட்மி 8ஏ, ரெம்மி 9 ப்ரைம், ரெட்மி நோட் 5, ரெட்மி நோட் 5 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் மியூஐ 12 (MIUI 12)ஐ வெளியிட்டது. சில நாட்களில் ரெட்மி 8ஏ டூயல் பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைத்துள்ளது. மியூஐ 12, சிஸ்டம் அனிமேஷன் பகுதியில் ஆப்டிமைசேஷன் உள்ளிட்ட இண்டர்ஃபேஸ் அளவிலான மாற்றங்களைத் தருகிறது.

இந்த மேம்படுத்தல் (அப்டேட்) ஜனவரி 2021 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச்சையும் கொண்டுள்ளது. ரெட்மி 8ஏ டூயல் பயனர்கள் சிஸ்டம் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று இதை சோதிக்கலாம். மியூஐ 12 அப்டேட் 487 எம்பி அளவை கொண்டிருக்கும்.
6.22 அங்குல தொடுதிரையுடன், 8 எம்பி ஆற்றல் கொண்ட முன்புற காமிரா, 13 எம்பி மற்றும் 2 எம்பி ஆற்றல் கொண்ட ரியர் டூயல் காமிரா, 32 ஜிபி சேமிப்பளவு, குவல்காம் ஸ்நாப்டிராகன் 439 பிராசஸர், 5000 mAh மின்கலம் கொண்டிருக்கும் ரெட்மி 8ஏ டூயல் 2 ஜிபி இயக்க ஆற்றலுடன் ரூ.7,499/- விலையிலும், 3 ஜிபி இயக்க ஆற்றலுடன் ரூ.8,299/- விலையிலும் கிடைக்கிறது.

You'r reading ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறீர்களா? மியூஐ அப்டேட் வருகிறது Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை