இந்திய சந்தைக்குப் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மீ யூ-1 மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஆகிய செல்போன்களுக்கு இணையாக ஹானர் (Honor) நிறுவனம் தனது ஹானர்- 8 சி செல்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஸ்னாப்டிரகன் 632 சிப்செட் பிராசஸர் மற்றும் 4000 mAh திறன் கொண்ட மின்கலம் ஆகியவை இதன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும். ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட காமிராக்களுடன் அனைவரும் வாங்கக்கூடிய விலை பிரிவில் ஹானர்- 8சி கிடைக்கிறது. வரும் டிசம்பர் 10- ம் தேதி முதல் அமேசானின் இந்திய இணையதளம் மற்றும் ஹானர் நிறுவனத்தின் இணையதளம் மூலம் இதை வாங்கிக்கொள்ளலாம்.ஹானர் 8சி சிறப்பம்சங்கள் - ஒரு பார்வை
தொடுதிரை: 6.26 அங்குலத்தில் HD தரத்தில் 1520X720 ரகம்; 19:9 விகிதாச்சாரம் கொண்டது
பிராசஸர்: புத்தம் புதிய ஸ்னாப்டிரகன் 632 சிப்செட்; ஆக்டாகோர் ரகம்; 1.8 கிகாஹெட்ஸ் மற்றும் ஆட்ரினோ 506 ஜிபியூ இயக்கவேகம்: 4 ஜிபி RAM சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று இரண்டு சேமிப்பளவுகளில் கிடைக்கிறது. இரண்டுமே 256 ஜிபி வரைக்கும் சேமிப்பளவை சேர்த்துக்கொள்ளக்கூடிய வசதி கொண்டவை.
பின்பக்க காமிரா: செயற்கை நுண்ணறிவு (AI) என்னும் நவீன தொழில்நுட்பம் அடங்கிய 13 எம்பியுடன் f/1.8 அபெர்சர் மற்றும் 2 எம்பி திறன் கொண்ட இரண்டு காமிராக்கள் பின்பக்கம் உள்ளன. 8 எம்பி மற்றும் f/2.0 அபெர்சர் திறன் கொண்ட காமிரா முன்பக்கம் அமைந்துள்ளது. மின்கலம்: 4000 mAh திறன் கொண்ட பேட்டரி. ஒரு முறை முழுவதும் சார்ஜ் செய்தால் இருநாள்களுக்கு பயன்படுத்தலாம்.மென்பொருள்: ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட EMUI 8.2
விலை: 4 ஜிபியுடன் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட ஆனர் 8 சி அலைபேசி 11,999 ரூபாய்க்கும் 4 ஜிபியுடன் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட அலைபேசி 12,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.டிசம்பர் 10-ம் தேதி இந்த அரிய பொக்கிஷத்தை அள்ளிக்கொள்ள முந்துங்கள்!