அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தில் முட்டை பண்ணை ஒன்று தான் விற்பனை செய்த தொற்று பாதித்த முட்டைகளை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தின் முட்டை பண்ணை தொற்று கிருமிகள் பாதித்த முட்டைகளை சுமார் ஒன்பது மாகாணங்களுக்கு விற்பனை செய்துள்ளது. சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமாக முட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொற்றுக்கிருமி பாதித்த முட்டைகளை விற்பனை செய்யும்போது அந்த முட்டைகளை வாங்கிப் பயன்படுத்தும் மக்களுக்கு தொற்று பாதிப்புகள், வயிறுக்கோளாறு, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதையடுத்து தொற்றுக்கிருமி பாதித்த சுமார் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட முட்டைகள் அனைத்தையும் விற்பனை செய்த ஒன்பது மாகாணங்களிலிருந்தும் திரும்பப்பெறுவதாக அந்தத் தனியார் முட்டைப் பண்ணை அறிவித்துள்ளது.
’ரோஸ் ஏக்கர் பண்ணை’ என்ற அந்த முட்டைப் பண்ணை மொத்த விற்பனை செய்துள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஹோட்டல்கள் என அனைத்து இடங்களிலிருந்தும் தகுந்த அறிவிப்புகளுடன் பாதித்த முட்டைகளை திரும்பப்பெற்று வருவதாக அமெரிக்க உணவுப்பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.