மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை விவகாரம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியர்! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இந்தக் கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்தும் ஆடியோ டேப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது ஒரு பெரும் கிரிமினல் வலைப்பின்னலாக தெரிகிறது. ஆளுநர் அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது.

நிர்மலா தேவி கருவியாக செயல்பட்டிருக்கிறார். அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும், நிர்மலா தேவியால் வலியுறுத்தப்பட்ட மாணவிகள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். தவிர, நிர்மலா தேவி மீது நடவடிக்கை கோரி மாதர் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி நிர்வாகம் மேற்படி பேராசிரியை நிர்மலா தேவியை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்தது.

இதன் அடுத்தகட்டமாக கல்லூரி நிர்வாகமும், மாதர் அமைப்பும் தனித்தனியாக நிர்மலா தேவி மீது போலீஸில் புகார் செய்தன. அவற்றின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீஸார் நிர்மலா தேவியின் இல்லத்திற்கு சென்றனர்.

இதனையடுத்து, பேராசிரியை நிர்மலா தேவியின் அருப்புக்கோட்டை இல்லத்தை சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளார். மேலும், வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து வீட்டின் பூட்டை உடைத்து போலீசார், அவரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!