இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தடை

இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.


இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உச்சத்தில் இருந்த கொரோனா அதன்பிறகு படிப்படியாக குறைந்தது.


இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது.


இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. அதனை தொடர்ந்து நேற்றைய தினம் 1,15,736 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.


இந்தியாவில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தற்போது, பாதிப்பும் அதிகரித்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் இங்கிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தற்காலிக தடை விதித்துள்ளார். இந்தத் தடை உத்தரவும் வரும் 11ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை இந்தியா வந்துள்ள நியூசிலாந்து நாட்டவருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் சிறப்பாகச் செயால்பட்டதன் காரணமாக சர்வதேச நாடுகளால் பாராட்டப்பட்டார்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாகவே தேர்தலில் ஜெசிந்தா மாபெரும் வெற்றியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

READ MORE ABOUT :