ஃபேஸ்புக்- வாட்ஸ்அப் இடையே நடந்து வரும் போரில் வாட்ஸ்அப் நிறுவனர் தனது பதவியைத் துறக்க தயாராகி வருகிறார்.
வாட்ஸ்அப் நிறுவனரான ஜான் கூம் தனது பதவியை துறக்க தயாராகி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு சுமார் 1.26 லட்சம் கோடி ரூபாய்க்கு வாட்ஸ்அப் உரிமையை ஃபேஸ்புக் நிறுவத்துக்கு விற்றார் ஜான் கூம்.
இதன் பின்னர் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் முக்கிய அங்கம் வகித்தார் ஜான் கூம். தொடர்ந்து சமூக வலைதளங்கள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து உலகின் முக்கிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் ஜான் கூம்.
ஆனால் சமீப காலமாக ஃபேஸ்புக் நிறுவன இயக்குநர்கள் மற்றும் வாட்ஸ்அப் சொந்தக்காரருமான ஜான் கூம் இடையே தொழில் ரீதியான மோதல்கள் நீடித்து வந்துள்ளன. இந்நிலையில் பயனாளர்களின் சொந்தத் தகவலை திருடியதாக சிக்கிக்கொண்டு சமீபத்தில் சர்வதேச பிரச்னையை சந்தித்து வரும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயனாளர்களில் தகவல்களையும் திருடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், வாட்ஸ்அப் நிறுவனர் ஜான் கூம் இதற்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் இவருக்கும் ஃபேஸ்புக் நிர்வாகிகளுக்கும் இடையே தற்போது பிரச்னை தீவிரமாகியுள்ளது. இதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் ஜான் கூம்.
இதுவரையில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும் ஃபேஸ்புக்கிலிருந்து வாட்ஸ்அப் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.