ஹாங்காங் டூ சீனா: உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை திறப்பு

world longest sea bridge opening tomorrow

by Isaivaani, Oct 23, 2018, 08:12 AM IST

ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்லும் வகையில் உலகின் மிக நீண்ட கடல் பாலம் ஒன்று நாளை திறக்கப்படுகிறது.

ஹாங்காங்கையும் சீனாவையும் இணைக்கும் வகையில் உலகின் மிக நீண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தின் மூலம், பயண நேரம், 3 மணியில் இருந்து 30 நிமிடங்களாக குறையும்.

தெற்கு சீனா முழுவதும் 56,500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல இந்த பாலம் வழிவகுக்கும். பாலத்தில் பயணம் செய்ய விரும்பும் மக்களுக்காக சிறப்பு வாடகை கார்கள் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த பாலம் பல்வேறு காரணங்களால் திறக்க முடியாமல் போனது. இந்நிலையில், உலகின் மிக நீண்ட கடல் வழி பாலம் நாளை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ஹாங்காங் டூ சீனா: உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை திறப்பு Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை