யோகிபாபுவுக்கு வந்த யோகத்தை பாருங்களேன்!

யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் கூர்கா படத்தில் இவருக்கு ஜோடியாக கனடா மாடல் நடிக்கவுள்ளாராம்.

Yogi Babu

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. 'எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சி டி' என நயன்தாராவிடமே புரபோஸ் பண்ண யோகிபாபு, தற்போது கதையின் நாயகனாக கூர்கா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கனடா நாட்டு மாடல் எலிசா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

‘யாமிருக்க பயமே’ படத்தில் பன்னி மூஞ்சி வாயனாக வந்த யோகிபாபு, தற்போது விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்களில் சோலோ காமெடியனாக கலக்கி வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில் உருவான கோலமாவு கோகிலா படத்தில் தலைவி நயன்தாராவை ஒன்சைடாக ரொமான்ஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்ததும், தனது நடிப்பு திறமையை அனாயசமாக வெளிப்படுத்தினார் யோகிபாபு.

யோகிபாபு நாயகனாக நடிக்கவுள்ள இந்த கூர்கா படத்தை சாம் ஆண்டன் இயக்குகிறார்.

READ MORE ABOUT :