Jul 28, 2019, 11:00 AM IST
குடும்பமாக சுற்றுலா சென்று வரவேண்டும் என்று எண்ணியும், 'ஆசைப்பட்டு தொட்டுவிடுவேன்; காசை கண்டு விட்டுவிடுவேன்,' என்ற டி.ராஜேந்தர் பாடலை போல எத்தனை முறை செலவை கணக்கிட்டு மலைத்துப்போய் இருப்பீர்கள்? அதிக பணம் செலவு செய்தால்தான், சுற்றுலா போக முடியும் என்பது உண்மையா? இல்லை! சரியாக திட்டமிட்டால் செலவு கையைக் கடிக்காமல் இன்பமாக சென்று, திருப்தியாக திரும்பி வரலாம். கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனமும், திட்டமிடலுமே இதற்கு அவசியம். Read More
Jul 27, 2019, 18:23 PM IST
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறோம்? புகை பிடிக்கமாட்டார், உடல் எடையை சரியானபடி பேணுவதற்கு முயற்சிக்கிறார், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து மிக்கவை என்று ஆரோக்கியமான உணவு பொருள்களை மட்டும் சாப்பிடுகிறார், ஒழுங்காக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார் - ஆரோக்கிய வாழ்வின் காரணிகளாக கூறப்படும் இவற்றின் அடிப்படையில்தான் ஆரோக்கியத்தை அளவிடுகிறோம். Read More
Jul 25, 2019, 18:59 PM IST
எந்தத் துறையாக இருந்தாலும் நேர்முக தேர்வில், 'உங்களைப் பற்றி சொல்லுங்களேன்' (tell us about yourself) என்ற கேள்வி இருக்கக்கூடும். நேர்முக தேர்வு நடத்துபவர் அல்லது குழுவில் ஒருவர், தேர்வை ஆரம்பிப்பதற்காக இந்தக் கேள்வியை கேட்கக்கூடும். இதற்கு நீங்கள் பதில் கூறும் விதத்தைக் கொண்டே அவருக்கு / அவர்களுக்கு உங்கள்மீது ஒரு அபிப்ராயம் உருவாக வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த தருணத்தை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு உதவும் சில குறிப்புகளை கீழே தந்துள்ளோம். Read More
Jul 23, 2019, 22:04 PM IST
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் இ-சிகரெட் இந்தியாவில் அறிமுகமானது. தற்போது அது இளைஞர் மத்தியில் பரவலாக புழக்கத்தில் உள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் நச்சு இ-சிகரெட்டில் இல்லை என்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. Read More
Jul 21, 2019, 19:52 PM IST
குழந்தைகளுக்கான உணவு பொருள்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் ஆறு மாதங்களுக்குக் குறைவான வயதுடைய பச்சிளங்குழந்தைகளுக்கு அவற்றை பரிந்துரைக்கவேண்டாமென குழந்தை, மகப்பேறு மருத்துவர்களையும், உணவியல் வல்லுநர்களையும் கேட்டுக்கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனம் தாய்ப்பால் கொடுப்பதையும் வீட்டில் தயாரிக்கும் சத்துள்ள உணவுகளை கொடுப்பதை ஊக்கப்படுத்தும்படியும் அறிவுறுத்தியுள்ளது. Read More
Jul 20, 2019, 22:13 PM IST
'வீட்லயிருந்து ஆபீஸ். ஆபீஸ்ல இருந்து வீடு - தினசரி இதுக்குதான் நேரம் இருக்கு... என்ன வாழ்க்கையோ சாமி,' இப்படித்தான் எல்லோருக்கும் அலுத்துக்கொள்ளுகிறோம் அல்லவா! Read More
Jul 19, 2019, 22:58 PM IST
'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா?' என்பது போன்ற ஆராய்ச்சி நம் தமிழ் சமுதாயத்திற்குப் பழமையானது. 'தேகம் தன்னை மூடவே கூந்தல் போதுமே' என்று நீண்ட கூந்தலை வர்ணிக்கும் வார்த்தைகள் நம்மிடம் தாராளம். Read More
Jul 18, 2019, 16:56 PM IST
வாழ்க்கை பெருஞ்சிக்கலாக மாறி விட்ட காலகட்டம் இது. 'இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்ற ஔவையாரின் வாக்கிற்கிணங்க, பொருளாதார சிக்கலே பெரும்பாலான குடும்பங்களில் மனத்தாங்கல்களுக்குக் காரணமாகின்றன. அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன. Read More
Jul 16, 2019, 23:25 PM IST
கார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம்! இப்போதுதான் முதலாவது காரை வாங்க இருக்கிறீர்கள் என்றால் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். Read More
Jul 13, 2019, 11:56 AM IST
முகத்தில் இருக்கும் பருக்களை போக்குவதற்கு எல்லா வழிகளையும் முயற்சித்து பார்த்து அயர்ந்துபோய் விட்டீர்களா? தோல் மருத்துவர், கை மருத்துவம் என்று பல மருத்துவங்களை பார்த்தும் பலனில்லையா? இந்த எளிய வழிகளை முயற்சித்துப் பாருங்கள்! அதன்பிறகு உங்கள் முகத்தை உங்கள் கண்களே நம்பாது; அவ்வளவு அழகாயிருவீங்க! Read More