May 9, 2020, 11:20 AM IST
டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்யக் கூடாது என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. Read More
May 9, 2020, 11:17 AM IST
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் இரண்டே நாளில் ரூ.294 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன.தமிழகத்தில் கொரோனா அதிகமாகப் பாதித்துள்ள சென்னை பெருநகரைத் தவிர மற்ற மாவட்டங்களில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. Read More
May 9, 2020, 11:13 AM IST
டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை மூடுவதற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், ஆன்லைனில் மது விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. Read More
May 9, 2020, 11:08 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது.தமிழகத்தில் தினமும் சராசரியாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More
May 9, 2020, 10:46 AM IST
தமிழ்த் திரைப்பட துறையில் வரும் 11ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்க அனுமதி தமிழக அரசு அளித்திருக்கிறது. அப்போது மத்திய, மாநில அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More
May 9, 2020, 10:42 AM IST
திருநெல்வேலி, உத்தரவு மகாராஜா, தலைவா போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் உதயா. தற்போது அக்னி நட்சத்திரம், மாநாடு போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது சம்பளத்தில் 40 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். Read More
May 9, 2020, 10:36 AM IST
திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை 11ம் தேதி முதல் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்குத் தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர், Read More
May 9, 2020, 10:31 AM IST
டாக்டர் ஷானி ஹபீஸ் மற்றும் அவரது மகள் ரெயா ஃபாத்திமா ஹபீஸ் ஆகியோரின் இனிமையான குரல்கள், ரூக்ஸீனா முஸ்தபாவின் பாடல் வரிகள், இசை அமைப்பாளர் யெல்தோ பி.ஜான் கூட்டு முயற்சி இசை ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
May 9, 2020, 10:17 AM IST
கொரோனா ஊரடங்கு ஐம்பது நாளைக் கடந்து விட்ட நிலையில், திரைப்படத் தயாரிப்பு குறித்து இன்னும் ஒரு தெளிவு பிறக்காத சூழலில், இந்தத் தொழிலே மாபெரும் நஷ்டத்தில் சிக்கி கொண்டிருக்கிறது. Read More
May 9, 2020, 10:05 AM IST
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துப் பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. கடந்த மே மாதம் முதல் தேதி பல மொழிகளிலும் முதல் முறையாகத் தொலைக்காட்சி ஓ.டி.டி. முறையில் ஒளிபரப்பான பட்டாஸ் திரைப்படம் மாபெரும் சாதனை செய்திருக்கிறது Read More