Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 16, 2020, 12:54 PM IST
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Read More
Mar 16, 2020, 11:19 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் முக்கிய துறைகளுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Mar 16, 2020, 11:04 AM IST
பாஜகவினர் கடத்திச் சென்ற காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை விடுவித்தால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று கவர்னரிடம் முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார். Read More
Mar 16, 2020, 10:55 AM IST
ம.பி. சட்டசபையில் இன்று காலை கவர்னர் லால்ஜி டாண்டனர் உரையாற்றுகிறார். அதே சமயம், அவர் உத்தரவிட்டிருந்தபடி, கமல்நாத் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று தெரிகிறது. Read More
Mar 15, 2020, 16:01 PM IST
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. Read More
Mar 14, 2020, 12:52 PM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். Read More
Mar 13, 2020, 16:06 PM IST
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நேற்று அறிவித்தார். அப்போது,எனக்கு முதல் அமைச்சர் ஆசை கிடையாது. கட்சி தொடங்கினாலும் கட்சிக்குத் தலைமை ஏற்றுவிட்டு முதல்வர் பதவிக்குப் படித்த, அன்புமிக்க, திறமைசாலியை முதல்வராக்குவேன் எனக் கூறியிருந்தார். Read More
Mar 13, 2020, 15:53 PM IST
நடிகர் வடிவேலு காமெடியனாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதால் அவரது லக லக காமெடி கலாட்டாக்கள் இல்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்கள் பழைய காமெடிகளை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவ்வப்போது பொது வெளியில் தடாலடியாகப் பேட்டி கொடுத்து மீம்ஸ் கிரியேட்டர் களுக்கு புத்துயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. Read More
Mar 13, 2020, 13:42 PM IST
ஏழு மாதமாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More