Jul 29, 2019, 12:05 PM IST
டெல்லி உள்பட 13 இடங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்புடைய ‘குரூப்’ நிறுவனத்தின் 200 கோடி கறுப்பு பணச் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 28, 2019, 11:02 AM IST
ஜூன் மாதம் முடிந்த காலாண்டு கணக்குப்படி, இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் முதலிடத்தை ரிலையன்ஸ் ஜியோ பிடித்துள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் இரண்டாமிடத்துக்கு இறங்கியுள்ளது. Read More
Jul 26, 2019, 10:24 AM IST
காஷ்மீரின் கார்கில் பகுதியில் வாலாட்டிய பாகிஸ்தானை, 1999 ஜூலை 26 இதே நாளில் வாகை சூடியது இந்தியா.கார்கில் போர் வெற்றியின் 20-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, இந்திய படைகளின் வீரம், துணிச்சலுக்கு தலை வணங்குவோம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார். இதே போல் பிரதமர் மோடியும், போர் நடைபெற்ற போது இந்திய வீரர்களை சந்தித்து உரையாடிய பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். Read More
Jul 26, 2019, 09:13 AM IST
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் புயல் வேகப்பந்து வீச்சாளருமான லஸித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.கொழும்புவில் வங்கதேசத்துடன் இன்று நடைபெறும் முதலாவது ஒரு போட்டியே மலிங்கா பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். Read More
Jul 25, 2019, 14:07 PM IST
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக எம்.பி.க்கள் இன்று தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 23 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்யசபாவில் காலடி வைத்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என உரத்த குரலில் உறுதிமொழி வாசித்த போது எம்.பி.க்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். Read More
Jul 25, 2019, 13:41 PM IST
குஜராத்தில் லாக் அப் முன்பாக இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடி, டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். Read More
Jul 25, 2019, 10:21 AM IST
கர்நாடக அரசியலில் 2 வாரங்களுக்கும் மேலாக வீசிய சூறாவளி குமாரசாமி அரசை காவு வாங்கி விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அமைதி காக்கின்றனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் ரமேஷ்குமார் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே, ஆட்சியமைக்க உரிமை கோரும் முடிவில் பாஜக தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது. Read More
Jul 23, 2019, 13:13 PM IST
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More
Jul 20, 2019, 12:37 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடத்தப் போவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த திருச்சியைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாஸ்ட் புட் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த அந்த நபர் வேலை பறிபோன மன அழுத்தத்தில் கடத்தல் மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More
Jul 20, 2019, 11:53 AM IST
இளந்தலைமுறையினரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வண்ணம் கேம்பூஸ்ட் 2.0 நிறுவப்பட்ட ஸ்மார்ட்போனை ஆப்போ நிறுவனம் விற்பனை செய்ய இருக்கிறது. திரையின் ஒளியை குறைக்கும் டிசி டிம்மிங், கண்களுக்கு பாதிப்பில்லாமல் காக்கும் ஜெர்மனியின் டியூவி ரெய்ன்லேண்ட் தொழில்நுட்பம் மற்றும் விரைவாக மின்னேற்றம் செய்யக்கூடிய VOOC 3.0 உள்ளிட்ட நவீன வசதிகள் ஆப்போ கே3 ஸ்மார்ட்போனில் உள்ளன. Read More