இரட்டை அகல ரயில் பாதை பணிகள் : பல ரயில்கள் மாற்றம்

இரட்டை அகல ரயில் பாதை பணிகள் காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையுடன் ரத்து, குருவாவார் எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கபோகும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

by Balaji, Feb 19, 2021, 19:56 PM IST

இரட்டை அகல ரயில் பாதை பணிகள் காரணமாக வரும் நாட்களில் கீழ்காணும் ரயில்கள் முழுவதுமாக / பகுதி ரத்து மற்றும் பாதை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முழுவதுமாக ரத்து:

02627/8 திருச்சிராப்பள்ளி- திருவனந்தபுரம்- திருச்சிராப்பள்ளி விரைவு வண்டி 19.02.2021 முதல் 28.02.2021 வரை முழுவதுமாக ரத்து

06127 சென்னை எழும்பூர்- குருவாயூர் விரைவு வண்டி மதுரையில் இருந்து தென்காசி வழியாக திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும்.*

24.02.2021, 25.02.2021, 26.02.2021 மற்றும் 28.02.2021 ஆகிய நாட்களில் மாற்று பாதையில் செல்லும்.

இதனால் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிறுத்தங்கள் வழியாக செல்லாது.

02631/2 சென்னை எழும்பூர்- திருநெல்வேலி- சென்னை எழும்பூர் விரைவு வண்டி 24.02.2021 முதல் 28.02.2021 வரை மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

06321/2 நாகர்கோவில்- கோயம்புத்தூர்- நாகர்கோவில் விரைவு வண்டி 24.02.2021 முதல் 28.02.2021 வரை மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

07235/6 நாகர்கோவில்- பெங்களூரு- நாகர்கோவில் விரைவு வண்டி 24.02.2021 முதல் 28.02.2021 வரை விருதுநகர் வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

02667/8 நாகர்கோவில்- கோயம்புத்தூர்- நாகர்கோவில் விரைவு வண்டி 25.02.2021 முதல் 28.02.2021 வரை மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

06235/6 தூத்துக்குடி- பெங்களூரு- தூத்துக்குடி விரைவு வண்டி 28.02.2021அன்று ஒருநாள் மட்டும் மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

06071 மும்பை தாதர்- திருநெல்வேலி விரைவு வண்டி 28.02.2021அன்று ஒருநாள் மட்டும் விருதுநகர் வரை மட்டுமே செல்லும்.

You'r reading இரட்டை அகல ரயில் பாதை பணிகள் : பல ரயில்கள் மாற்றம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை