மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?

by Ari, May 4, 2021, 12:34 PM IST

ஒன்றாக நேரம் செலவிடும் வாய்ப்பு!' - தினமும் பாத்திரம் துலக்குவதில் மனைவிக்கு உதவும் பில்கேட்ஸ்| World's richest man Bill Gates still washes dishes with wife

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் பட்டியலின் படி, பில் கேட்ஸ் தற்போது 145.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டிருக்கிறார். பில்கேட்ஸ் உலகின் நான்காவது பணக்காரர். தனது மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார். அதன்பின், அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார். அப்போது, அந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டாவை 1980ல் சந்தித்த பில் கேட்ஸ், அவரை 1994ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. லாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதுதொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டுள்ளன. இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை" என தெரிவித்துள்ளனர்.

You'r reading மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…? Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை