கணவர்களின் விதி மனைவியின் பாதத்தில் உள்ளதா??வாங்க பார்க்கலாம்

husband life line is based on wife feet

by Logeswari, Sep 1, 2020, 16:32 PM IST

கணவர்களின் பிடி மனைவி கையில் உள்ளது என்றால் நம்பலாம்...ஆனால் கணவரின் விதி மனைவியின் பாதத்தில் உள்ளது என்றால் சற்று சிரிப்பாக தான் இருக்கும்.அந்த காலத்தில் ஆண்களுக்கு பெண்பார்க்கும் படலத்தில் வயதில் மூத்தவர்கள் சில விஷயங்களை ரகசியமாக கவனிப்பார்களாம்.அப்படி என்ன ரகசியம் என்பதை பார்ப்போம்:-

பெரும்பாலும் பெண்களில் கால்களில் உள்ள விரல்கள், கட்டை விரலை விட அடுத்த விரல் சற்று நீளமாகவே காணப்படும்.ஆனால் அந்த காலத்தில் அப்படி இருந்தால் அப்பெண்ணுக்கு வரும் கணவனின் நிலைமை மிகவும் பாவம் என்று கூறுவார்களாம்.அதனால் அப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் மணக்க யோசிப்பார்களாம்.

பெண்கள் கால்களில் உள்ள கட்ட விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் எப்பவும் சண்டை,சர்ச்சையாகவே இருக்குமாம்.அதுவே இடைவெளி அதிகமாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையில் செல்வம்,சந்தோசம்,நிம்மதியாகவும் காதல் இறுதி வரை குறையாமல் பயணிக்குமாம்.

பெண்களின் பாத்ததில் உள்ள சுண்டு விரலுக்கும் கீழே உள்ள பெருவிரலில் இருந்து ஒரு கோடு போவது போல் இருந்தால் அந்த பெண் புனிதம் நிறைந்த பெண்ணாக போற்றப்படுவாள்.இதனால் கணவனுக்கு அளவில்லாத புகழ் வந்து சேரும் என்று கூறுகின்றனர்.

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை