சோர்வடைந்த முகத்தைக் கழுவினால் மட்டும் போதுமா?

by Rahini A, May 25, 2018, 16:08 PM IST

சோர்வடைந்த முகத்தை வெறுமனே சுத்தப்படுத்துவது மட்டும் போதாது.

பெரும்பாலும் வெயில் காலத்தில் அதிகம் சுற்றுபவர்களுக்கு சரும பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க சருமத்தைப் பாதுகாக்க அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். சருமத்தைப் பாதுகாக்க பகலில் நேரமில்லாதவர்களுக்காக தூங்கப் போகும் முன்னர் செய்ய வேண்டிய டிப்ஸ்:

தூங்கும் முன் உங்கள் முகத்தை சுத்தமாகக் கழு வேண்டும். மேக்கப் போட்டுக் கொண்டு இரவு நேரத்தில் தூங்கச் செல்வது உங்கள் சருமத்துக்கு மிகுந்த கேடு விளைக்கும். அப்படிச் செய்வதால் முகச் சருமம் சத்துகளை இழுக்காது.

எனவே, ஒரு ஜென்டிலான க்ளென்ஸர் மூலம் முதலில் முகத்தில் இருக்கும் மேக்கப் நீக்கப்பட வேண்டும். இதற்கான முக க்ளென்ஸரை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். அதாவது, மூன்று பங்கு தேங்காய் எண்ணெய்யுடனோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் வேறு எண்ணெய்யுடனோ ஒரு பங்கு விளக்கெண்ணெய்யைக் கலக்குங்கள்.

இந்த எண்ணெய்க் கலவையை எடுத்து உங்கள் முகத்தில் மெதுவாக தேய்க்க ஆரம்பியுங்கள். எங்கு சருமம் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறதோ அங்கு அதிக நேரம் மசாஜ் செய்யவும் ஒரு மிருதுவான துணியே எடுத்து கதகதப்பான நீரில் நனைத்து முகத்தில் மெதுவாக வைக்கவும்.

இது சருமத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேறச் செய்யும். தற்போது, முகத்தை தேய்க்காமல், மெதுவாகத் துடைத்துவிடவும். இது முகத்தில் இருக்கும் எண்ணெய்யை எடுத்து விடும். இது முகத்தை மேளும் மிருதுவாக்கி முகத்தை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும்.

இயற்கையான ஒரு ஸ்கின் டோனர் வேண்டுமானால், ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். க்ரீன் டீயும் ஒரு இயற்கையாக கிடைக்கும் ஸ்கின் டோனர் தான். க்ரீன் டீயை மர எண்ணைய்யை சேர்த்து முகத்தில் தடவி பயன்பெறலாம். 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சோர்வடைந்த முகத்தைக் கழுவினால் மட்டும் போதுமா? Originally posted on The Subeditor Tamil

More Aval News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை