வைரலாகும் சூர்யாவின் செல்பி.. காரணம் என்ன தெரியுமா

Actor suriya selfie goes viral

by Sakthi, Mar 6, 2019, 21:40 PM IST

சூர்யா பற்றிய இரண்டு விஷயங்கள் தற்போது செம்ம ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சூர்யா

நடிகர் சூர்யா விஜய்யுடன் இணைந்து விஜய்யுடன் நேருக்கு நேர், ஃபிரெண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இருவரும் நல்ல குடும்ப நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோருடன் சிரித்துக் கொண்டே செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படன் நேற்றிலிருந்து வைரல் ஆகி வருகிறது. இந்தப் புகைப்படம் வைரலாக மற்றுமொரு காரணம் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார்.

சூர்யா

செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு கோவப்பட்டார் சிவக்குமார். ஒருமுறை அல்ல இரண்டு முறை இது போன்று நடந்துவிட்டது. மேலும் சமீபத்தில் நடந்த ஜூலை காற்றில் திரைப்பட விழாவில் நடிகை கஸ்தூரி செல்ஃபி எடுக்க முயன்றபோது நடிகர் கார்த்தி கோவப்பட்டார். 'தந்தைக்கு செல்ஃபி என்றாலே பிடிக்கவில்லை. மகன் மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சூர்யா எடுத்துக் கொண்ட செல்ஃபியை பதிவிட்டு சூர்யாவின் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சூர்யாவின் அடுத்த படம்பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிவா நடிகர் சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவா – சூர்யா கூட்டணி இணையும் படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

 

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை