‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சிக்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் 37 டேக் வாங்கியுள்ளதாக அவரே ஒரு பிரபல ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய் சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் 'சூப்பர் டீலக்ஸ்'. படத்தின் கதையை, தியாகராஜன் குமாரராஜா, நீலன் கே.சேகர், மிஷ்கின், நலன்குமாரசாமி உள்ளிட்டோர் எழுதியுள்ளனர். சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது என்கிறது படக்குழு. ரம்யா கிருஷ்ணன் Porn நடிகையாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள ரம்யா கிருஷ்ணன், `இது என் சினிமா வழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக அமையும். படத்தில் ரம்யா நான் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சியை மட்டும் இரண்டு நாட்களாக படமாக்கினார்களால். ஒரு காட்சிக்காக 37 டேக் எடுத்தார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.