தளபதி 63க்காக தயாராகி வரும் பிரம்மாண்ட செட்!

biggest football stadium set for thalapathi 63 movie

by Mari S, Apr 8, 2019, 11:12 AM IST

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி-63’ படத்துக்காக சென்னையை அடுத்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள இ.வி.பி பூங்காவில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய்யை அட்லி இயக்கும் மூன்றாவது படம் தளபதி -63. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படம், முழுக்க முழுக்க சென்னையை சுற்றியே படமாக்கப்பட்டு வருவது சவாலான விஷயம் தான்.

தளபதி விஜய்யின் ஷூட்டிங் நடக்கிற இடம் ஒருவருக்கு தெரிந்தால் கூட அங்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்திற்காக சென்னையை அடுத்து பூந்தமல்லி ஹைவேயில் உள்ள இவிபி பூங்காவில் கால்பந்தாட்ட மைதான செட்டை மிகவும் பிரம்மாண்டமாக படக்குழு அமைத்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சி இந்த செட்டில் தான் படமாக்கப்படவுள்ளதாம்.

இந்த படத்தில், வில்லு படத்திற்கு பிறகு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், கதிர், இந்துஜா, யோகிபாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக தளபதி 63 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

You'r reading தளபதி 63க்காக தயாராகி வரும் பிரம்மாண்ட செட்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை