சூப்பர் டீலக்ஸ் வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் எவ்வளவு சம்பாதித்திருக்கிறார் தெரியுமா

விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் வசூல் நிலவரம் கிடைத்துள்ளது.

சூப்பர் டீலக்ஸ்

ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் எட்டு வருடங்கள் கழித்து வெளியாகியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய்சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. இப்படம் ஏ சான்றிதழுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. இப்படத்தின் பட்ஜெட் 13 கோடி ரூபாய். அதில் விளம்பர செலவு மட்டும் 1.5 கோடி ரூபாய். விநியோக செலவு 50 லட்சம். ஆக படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 15 கோடி.இதில் கேரளா 50 லட்சத்துக்கும், கர்நாடகாவில் 60 லட்சத்துக்கும், ஹிந்தி டப்பிங் உரிமை 75 லட்சத்துக்கும், ஓவர்சிஸ் 2 கோடிக்கும், ஆடியோ ரைட்ஸ் 25 லட்சத்துக்கு விற்பனையானது. தவிர, படத்துக்கு கிடைத்த டிஜிட்டல் ரைட்ஸ் 7 கோடி. இறுதியாக தமிழகத்தில் தியேட்டரில் 12.25 கோடி ரூயாய் வரை 1 வார நாட்கள் வசூலானது. இதிலிருந்து தயாரிப்பாளருக்கு கிடைத்த பணம் 7.5 கோடி ரூபாய். ஆக மொத்தம் தயாரிப்பாளருக்கு கிடைத்த மொத்த வசூல் தோராயமாக 19 கோடி. ஆக, தயாரிப்பாளருக்கு கிடைத்திருக்கும் நிகர லாபம் 4 கோடி ரூயாய்.

இப்படத்தின் சேட்டிலைட் உரிமை விற்கப்படவில்லை. ஏனென்றால், பொதுவாக ஏ சான்றிதழ் படங்கள் மறுதணிக்கைக்குப் பிறகே சேட்டிலைட் உரிமைக்கு விற்கப்படும். ஆனால், இப்படம் மறுதணிக்கை செய்தாலும் யு சான்றிதழ் பெறாது என்பதால் சேட்டிலைட் உரிமை விற்பனையாவது கஷ்டம் தான். தவிர, தெலுங்கு டப்பிங் ரைட்ஸ் இன்னும் விற்பனையாகவில்லை. அது விற்பனையானால் ஒரு பெரிய தொகை தயாரிப்பு தரப்பின் கைக்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அடுத்த இன்னிங்ஸ் தெலுங்கில்… மெகா ஹிட் இயக்குநர் படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds