பெங்களூரு, ஒயிட்ஃபீல்டில் உள்ள சினிபோலிஸ் திரையரங்கில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த சனிக்கிழமை இரவு 9.57 மணி காட்சியின் போது, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை பார்க்கும் ஆர்வத்தில் தியேட்டருக்குள் கூட்டம் அலைமோதியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு தையல் போடும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
32வயது பெண் ஒருவர் படம் பார்க்க ஒயிட்ஃபீல்டில் உள்ள சினிபோலிஸ் திரையரங்கிற்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இரவு காட்சியின் போது படம் திரையிடுவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்னர் தான் திரையரங்கு திறக்கப்பட்டதால், படத்தின் முதல் காட்சியை மிஸ் பண்ணிவிடக்கூடாது என்ற ஆர்வக்கோளாறு காரணமாக கூட்டம் முண்டியடித்து சென்றது.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் மீது வாயிலேயே சிலர் மிதித்துச் சென்றுள்ளனர்.
இதனால், காயம் ஏற்பட்ட அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வாயில் தையல் போட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அடிபட்ட பெண்ணின் நண்பர் கிஸர் அகமது ஷெரிப் தெரிவித்தார்.
ஆனால், தியேட்டர் விதிமுறைகளின் படியே நாங்கள் பார்வையாளர்களை உரிய நேரத்தில் அனுமதித்தோம். இதில், எந்த விதி மீறலும் அல்ல படத்தை பார்க்கும் ஆர்வத்தில் ஏராளமான கூட்டத்தினர் கூடியதால் தான் அந்த விபத்து ஏற்பட்டது என தியேட்டர் மேனேஜர் யாசிர் சோஹைல் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.