பிக்பாஸ் வீடு உறவுகளை வளர்க்கிறதா? அல்லது சண்டைகளை வளர்க்கிறதா? ஒரு டீட்டெய்ல் ரிவ்யூ!

Really what Biggboss House make Relationship or War Mind?

by Mari S, Jun 25, 2019, 20:07 PM IST

பிக்பாஸ் வீட்டில், மூன்று மாதங்கள் பிரபலங்கள் தங்கி இருந்து அவர்கள் அவர்களாகவே நடந்து கொள்வது போலவும், அதில் நிலவும் சண்டை, சச்சரவுகள், காதல், பொறாமை, போட்டி, பாசம், அழுகை, என கம்ப்ளிட் கலவைகள் நிறைந்த மசாலா மிக்சராகவே பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

வெற்றிகரமாக இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் ஹாசனே மூன்றாவது முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அரசியல் மற்றும் சினிமாவில் பிசியாகததால், இந்த நிகழ்ச்சியையாவது பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே அறிவிக்கப்பட்ட இந்தியன் 2 மற்றும் தேவர் மகன்2 படங்களின் நிலை, மேலும், சபாஷ் நாயுடு, மர்மயோகி, மருதநாயகம் என எந்தவொரு முடிவு பெறாத புராஜெக்டுகள் குறித்த கவலையும் நடிகர் கமலுக்கு இல்லாமல் இருப்பது சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.

அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி, விளம்பரங்களாக வெளியிட்டு, பிரசாரம் நடத்திய கமல், அதிலும் தீவிரமாக இறங்கி செயல்படாததும், இப்போதிலிருந்து அரசியலில் களம் கண்டு மக்கள் குறைகளை கேட்டு அறிந்து கொண்டு, கட்சியின் பலத்தை பெருக்கினால் தானே, வரும் சட்டமன்ற தேர்தலிலாவது முதல்வராக முடியும்.

சரி பிக்பாஸில் வரும் நல்ல வருமானத்தை கமல் எப்படி வேண்டாம் என்பார். அதை விட்டுவிடுவோம். நிகழ்ச்சியை பற்றி அலசுவோம்.

பிக் பிரதர் எனும் ஆங்கில டிவி சேனலில் வெளியான இந்த ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் எனும் பெயரில் இந்தியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இங்கேயும் தமிழில் மூன்றாவது ஆண்டில் பிக்பாஸ் சீசன் 3 கோலாகலமாக துவங்கியுள்ளது.

முதல் பிக்பாஸ் இருந்த அளவுக்கு இரண்டாவது பிக்பாஸ் ருசிகரமாக இல்லையென்றும், மூன்றாவது சீசன் போட்டியாளர்கள் அதைவிட மொக்கைகளாக இருக்கின்றனர் என்ற கமெண்டுகள் வந்த வண்ணம் இருந்தாலும், அடுத்த வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்கும் பழக்கம் மரபியல் ரீதியாகவே மக்களுக்கு பழகி விட்டதால், எத்தனை முறை எத்தனை சீசன்கள் வந்தாலும் இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்கள் வெற்றியடைவது நிச்சயம்.

நிஜங்களை பிரதிபலிக்கிறேன் என்ற பேர்வழியில், மக்களின் மனங்களில் உள்ள வக்கிரங்களையும், பொறாமை எண்ணங்களையும் டிஆர்பிக்காக வெளிக்காட்டுவது மிகவும் மோசமான நடைமுறை.

அவ்வப்போது, சொந்தக் கதைகளையும் சோகக் கதைகளையும் சொல்லி, வில்லனாக தெரியும் ஒருவரை ஹீரோ ஆக்குவதும், ஹீரோவாக இருப்பவரை வில்லனாக்குவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாப் கிளாஸ் அரசியல்.

இந்த முறை பிக்பாஸ் இல்லத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி அறைகள் இல்லை என்பது இளசுகளை அவர்கள் இரவில் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கற்பனைக்கு இட்டுச் செல்லும் மட்டமான ஐடியாவாக இருந்தாலும், அது நிகழ்ச்சிக்கு ரசிகர்களை ஈர்க்கும் வெற்றி ரகசியம் தான்.

பாத்திமா பாபு, சேரன், சாக்‌ஷி அகர்வால், ஷெரின், லொஸ்லியா, சாண்டி, மோகன் வைத்தியா, வனிதா விஜயகுமார், மதுமிதா, சரவணன், அபிராமி, ரேஷ்மா, முகன் ராவ், கவின் மற்றும் தர்ஷன் என மொத்தம் 15 போட்டியாளர்களை இம்முறை பிக்பாஸ் இல்லத்தில் அனுப்பியுள்ளனர்.

ஓவியா போன்றோ யஷிகா ஆனந்த் போன்ற இளமையான ஹீரோயின்களை இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களால் பிடிக்க முடியவில்லையா? என்பது தெரியவில்லை.

வெளியிடும் புரொமோக்கள் ஒவ்வொன்றிலும் இன்னைக்கு யாருடன் சண்டை என்ற அளவிலே இந்த நிகழ்ச்சியைக் கொண்டு செல்வதும், காலையில் எழுந்தவுடன் ஓவியாவே போலவே அனைத்து பெண்களும் அரை டவுசருடன் ஆடுவது போல அசைவதும் இன்னும் எத்தனை நாட்களுக்கு அரைத்த மாவை அரைப்பார்களோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

பார்க்கலாம், இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாருக்கு ஆர்மி ஆரம்பிக்கப் போகிறார்கள் மற்றும் இம்முறை சர்வாதிகாரி டாஸ்க் போல எந்த அரசியல் தலைவரை மறைமுகமாக கமல் சாடப் போகிறார் என்பதை.. காத்திருப்போம்!

Also Watch..

You'r reading பிக்பாஸ் வீடு உறவுகளை வளர்க்கிறதா? அல்லது சண்டைகளை வளர்க்கிறதா? ஒரு டீட்டெய்ல் ரிவ்யூ! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை