காப்பான் படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சட்ட சிக்கல்

by Mari S, Aug 26, 2019, 14:02 PM IST

காப்பான் படத்தின் கதை தன்னுடையது என குரோம்பேட்டையை சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம், அடுத்த மாதம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 30ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரபாஸின் சாஹோ திரைப்படம் வெளிவருவதால், காப்பான் படத்தின் ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போனது.

இந்நிலையில், தற்போது காப்பான் படத்திற்கு புதிதாக ஒரு பூகம்பம் கிளம்பியுள்ளது. வழக்கமாக விஜய் படங்களுக்கு ஏற்படும் கதை திருட்டு பிரச்னை இம்முறை சூர்யாவின் காப்பான் திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ளது.

சரவெடி என்ற தலைப்பில் குரோம்பேட்டையை சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் எழுதிய கதையை திருடி காப்பான் திரைப்படம் எடுத்துள்ளதாக ஜான் சார்லஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை அடுத்த மாதம் செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்த வாட்டியாவது கன்ஃபார்மா ரிலீஸ் ஆகிடுமா தனுஷ் சார்!


Leave a reply