பிகில் டீசர் ரிலீஸ் எப்போ தெரியுமா?

by Mari S, Sep 5, 2019, 21:29 PM IST

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் இந்த மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா, இந்துஜா, கதிர், விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பிகில். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது.

இந்த படம் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பாடலான சிங்கப்பெண்ணே பாடலும் விஜயின் குரலில் வெறித்தனம் பாடலும் வெளியாகி சாதனை படைத்து வருகின்றது.

இந்த படத்திற்கு போட்டியாக சில படங்கள் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இருந்தாலும் தளபதி படத்திற்கான கூட்டம் குறையாது என்பது உறுதி.

இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அங்கமான டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 19ம் தேதி வெளியாகி மிரட்ட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Leave a reply