விஜயின் 65வது படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

by Mari S, Sep 11, 2019, 19:39 PM IST

விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யை இயக்கவுள்ளார். இந்நிலையில் விஜயின் 65வது படத்தை இயக்குனர் பேரரசு இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அட்லி இயக்கத்தில் தனது 63வது படத்தை நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பல முன்னணி பிரபலங்களான இந்துஜா, கதிர், யோகி பாபு என பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை இந்த வருடம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதனை அடுத்து விஜயின் அடுத்த படத்தை அதாவது அவரது 64வது படத்தை மாநகரம் படத்தை இயக்கி புகழ் பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் விஜயின் 65வது படத்தை பேரரசு இயக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே விஜயின் சிவகாசி, திருப்பாச்சி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர், பேரரசு. விஜய்காக நல்ல கதை ஒன்றை வைத்திருப்பதாகவும் அதில் விஜய் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


More Cinema News