அசுரனுடன் மோதும் ஜி.வி. பிரகாஷ்!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் 100% காதல் படம் தனுஷின் அசுரன் படத்துடன் மோத தயாராகி உள்ளது.

சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் திரைப்படம் கடந்த ஓராண்டாக ரிலீசுக்காக வெயிட்டிங் செய்து வருகிறது. இதே போல, ஜி.வி. பிரகாஷின் ஐங்கரன் படமும் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், 100% காதல் திரைப்படம் வரும் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அன்றைய தினத்தில் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் படமும் வெளியாகிறது.

அசுரன் படத்தின் முன்னோட்டங்கள் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தன. தனுஷ் – வெற்றிமாறன் வெறித்தனமான காம்போ களமிறங்கும் நேரத்தில் ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவான 100% காதல் படம் வெளியாவதால், ஜி.வி. பிரகாஷுக்கு தான் சிக்கல் என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

இயக்குநர் சசி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பு பாராட்டப்பட்டு வரும் நிலையில், அடுத்த படம் எந்த அளவுக்கு வெற்றியை ஈட்டும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement
More Cinema News
hrithik-and-prabhas-are-sexiest-asian-males
ஆசியாவில் கவர்ச்சி கதாாநாயகனாக பிரபாஸ்-ஹிருத்திக் தேர்வு
actress-kangana-and-team-offered-prayers-to-deceased-amma
தலைவி ஜெயலலிதாவுக்கு தலைவி நடிகை அஞ்சலி.. ஷூட்டிங்கில் 3ம் ஆண்டு நினைவு நாள்..
cant-romance-22-year-old-hero-in-the-50-sonakshi-sinha
இளம் ஹீரோவுடன் நெருங்கி நடிக்கமாட்டேன்.. ரஜினி நடிகை திடீர் அறிவிப்பு..
trisha-lands-key-role-in-mani-ratnams-ponniyin-selvan
சரித்திர படத்தில் திரிஷா முக்கிய வேடம்.. 2வது முறையாக மணியுடன் கைகோர்க்கிறார்..
director-ameer-plays-hero-in-upcoming-tamil-film-narkali
ரஜினி கதையில் நடிக்கிறார் டைரக்டர் அமீர்.. அரசியல் கதை நாற்காலி..
vishal-samantha-and-other-celebs-say-justice-served-to-disha-after-killers-encounter
4 பேர் என்கவுன்ட்டர்: விஷால், சமந்தா  பாராட்டு.. டிவிட்டரில் நட்சத்திரங்கள் வரவேற்பு..
sivakarthikeyans-new-film-titled-doctor
டாக்டர் ஆகும் சிவகாரத்திகேயன்.. அவசரமாக டைட்டில் வைத்தது ஏன்?
thala-ajith-film-release-after-24-years
24 வருடத்துக்கு பிறகு தல படம் மீண்டும் ரிலீஸ்.. டிஜிட்டல் பொலிவுபெறுகிறது..
actor-r-parthiban-opts-out-of-mani-ratnams-ponniyin-selvan
மணிரத்னம் படத்திலிருந்து பார்த்திபன் விலகல்..
archana-kalpathis-demand-from-thalapathy-64
தளபதி 64 அப்டேட் கேட்கும் பிகில் பட தயாரிப்பாளர்.. மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் எப்போது?
Tag Clouds