சமந்தாவை நோஸ் கட் செய்தாரா பி.வி. சிந்து?

by Mari S, Sep 12, 2019, 21:28 PM IST
Share Tweet Whatsapp

பி.வி. சிந்துவின் பயோபிக்கில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனை அறிந்த பி.வி. சிந்து அவருக்கு பதில், இந்த நடிகை நடித்தால் சரியாக இருக்கும் என உடனடியாக ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.

உலககோப்பை பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற பி.வி. சிந்துவின் பயோபிக் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. டோலிவுட்டில் இந்த பயோபிக் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதால், இந்த படத்தில் பி.வி. சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் தயாரிப்பாளர் பேசி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமந்தாவுக்கு பி.வி. சிந்து வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தாவை நோஸ் கட் செய்யும் விதமாக, தனது பயோபிக்கில் சமந்தாவுக்கு பதிலாக தீபிகா படுகோனே நடித்தால் கச்சிதமாக இருக்கும் என பி.வி. சிந்து ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.

பி.வி. சிந்துவின் முகம் மற்றும் தோற்றத்திற்கு தீபிகா படுகோனே சமந்தாவை விட கணகச்சிதமாக பொருந்துவார். மேலும், தீபிகா படுகோனே ஒரு பேட்மிண்டன் வீராங்கனை என்ற விளக்கத்தையும் பி.வி. சிந்து கொடுத்துள்ளார்.

சமந்தா நடித்தால், டோலிவுட் மற்றும் கோலிவுட் அளவிலே தனது பயோபிக் நின்று விடும் என்பதால், தான் தீபிகா படுகோனே நடித்தால் சர்வதேச அளவில் படத்திற்கான அங்கீகாரம் செல்லும் எனவும் சிந்து கருதியிருக்கலாம் என கூறப்படுகிறது.

சிந்துவே இப்படி ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்ட பிறகு, சமந்தா அந்த படத்தில் இனிமேலும் நடிக்க சம்மதிப்பாரா என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.


Leave a reply