இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் துவக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லை ஐசிசி களமிறக்கிறது.
வரும் செப்டம்பர் 15ம் தேதி இந்தியா – தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் சிறப்பாக ஆடி அசத்தி வந்த சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில், டெஸ்ட் போட்டி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் கே.எல். ராகுலுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் களமிறக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக துவக்க ஆட்டக்காரராக இறங்கி ஆடி வரும் கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை ஆடாமல், ஆரம்பத்திலே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பி வருவதால் தான் இந்த அதிரடி நடவடிக்கையை ஐசிசி எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேப்டன் விராத் கோலி, மயான்க் அகர்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, அஜிங்கே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், சஹா, அஸ்வின், ஜடேஜ, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் 15 பேர் கொண்ட இந்திய ஸ்குவாடில் இடம் பெற்றுள்ளனர்.