கருப்பு சட்டையில் மாஸ் காட்டும் விஜய்!

Vijay came in Black shirt for the Audio launch of Bigil

by Mari S, Sep 19, 2019, 19:47 PM IST

பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி, சிறுகலத்தூரில் நடைப்பெற்று வருகிறது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு தளபதி விஜய் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளார்.

கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க, அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் பிகில். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வைரலாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது.

இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு விஜய் கருப்பு சட்டை அணித்து வருகை தந்துள்ளார். பெரும்பாலும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளாத லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் படம் என்பதால் இந்த இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த இசைவெளியீட்டு விழாவில் பல நிகழ்ச்சிகள் நடைப்பெறவுள்ளது. வழக்கம்போல இந்த இசைவெளியீட்டு விழாவிற்கும் ஏதாவது குட்டிக்கதையுடன் தான் வந்திருப்பார், விஜய். மேலும் தனது ரசிகர்களுக்கு சந்தோஷம் கொடுக்கும் வண்ணம், வெறித்தனம் பாடலை நடிகர் விஜய் பாடுவாரா என்ற ஆவல் எகிறியுள்ளது.

தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படும் பிகில் படத்தின், டிரைலர் இந்த விழாவில் திரையிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இசைவெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

You'r reading கருப்பு சட்டையில் மாஸ் காட்டும் விஜய்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை