பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா?

by Mari S, Sep 21, 2019, 09:39 AM IST

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான தொகுப்பாளர் பெயரை விஜய் டிவி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் வெளியான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஹிந்தியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிக்பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பானது. ஹிந்தி பிக்பாஸை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வந்தார்.

மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்று வந்த இந்த ரியாலிட்டி ஷோவை தென்னிந்தியாவிலும் பரப்ப ஸ்டார் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாவது சீசனையும் கமல்ஹாசனே தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வரும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிக்பாஸ் சீசன் 3 இன்னும் 20 நாட்களுக்குள் முடிவு பெற உள்ளதால், அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா? இல்லை அவருக்கு பதிலாக சிம்பு, சூர்யா, சரத்குமார் என இவர்கள் மூவரில் யார் தொகுத்து வழங்க உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெரும்பாலும், சிம்பு மற்றும் சூர்யாவின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், இந்த வதந்திகளுக்கு விஜய் டிவி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து இதுவரை எந்த ஒரு நடிகருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற விளக்கத்தையும் தெரிவித்துள்ளது.


Speed News

 • டெல்லி அரசில் சம்பளம்

  போட பணம் இல்லை..

  டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார். 

  May 31, 2020, 14:10 PM IST
 • தொழிலாளர்களுக்கு எவ்வளவு

  கொடுத்தீர்கள்.. கபில்சிபல் கேள்வி

   

  காங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள்? இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்

  May 31, 2020, 14:07 PM IST
 • தெருவுக்கு வாங்கய்யா..

  யஷ்வந்த் சின்கா ட்விட்

  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

  May 23, 2020, 14:18 PM IST
 • சிறப்பு ரயில்கள் வேண்டாம்..

  மேற்கு வங்கம் கோரிக்கை

  மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது. 

  May 23, 2020, 13:57 PM IST
 • மகாராஷ்டிராவில் 44 ஆயிரம்

  பேருக்கு கொரோனா பாதிப்பு

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.

   

  May 23, 2020, 13:53 PM IST