ஆவி பறக்கும் அட்லிக்கு ஹாப்பி பர்த்டே!

by Mari S, Sep 21, 2019, 09:03 AM IST

இயக்குநர் அட்லியின் 33வது பிறந்த நாள் இன்று விஜய் ரசிகர்களால் ஹாப்பி பர்த்டே பிகில் அட்லி என்ற ஹேஷ்டேக் மூலம் இந்தியளவில் டிரெண்டாக்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்தார். பின்னர், நடிகர் விஜய்யுடன் தெறி படத்தில் கூட்டணி வைத்து, தெறி, மெர்சல் தற்போது பிகில் என் தொடர்ந்து சிக்சர்களாக அடித்து வருகிறார்.

அட்லி மீது எப்போதுமே காப்பிகேட் என்ற ஒரு குற்றச்சாட்டு சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்த சினிமாவை ஜனரஞ்சகமாக மக்களிடம் மாஸாகவும் கிளாஸாகவும் கொண்டு சேர்த்து ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளது மட்டுமில்லாமல், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்களையும் அள்ளி வருகிறார்.

இதுவரை அட்லி இயக்கிய 3 படங்களும் மாபெரும் வசூலை தமிழ் சினிமாவில் வாரி குவித்த படங்களாகவே உள்ளன. வரும் தீபாவளிக்கு வரப்போகும் பிகில் படம் தற்போதே பிசினஸ் ரீதியாக மாபெரும் கலெக்‌ஷனை அள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் கூட படம் இயக்க அட்லிக்கு அழைப்புகள் வந்தபோதும், விஜய் அண்ணாவை தவிற வேறு யாரும் தன் மனதில் கதை எழுதும் போது வருவதில்லை என பிகில் இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியுடன் அட்லி பேசியுள்ளார்.

ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்ற விஜய்யின் பேச்சில் பல அரசியல் கலந்து இருந்தாலும், சுட சுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி, அட்லி ஆனாலும் சரி என தனது செல்ல இயக்குநருக்கும் விஜய் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி, இன்று தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸ் இயக்குநர்களில் ஷங்கருடன் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்துள்ளார் என்றால் அது மிகையாகது.

தனது கருப்பு நிறம் குறித்த மீம்ஸ்களுக்கு, தனது உழைப்பின் வழியாகவே பதிலடி கொடுத்தும் வரும் அட்லிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!


Speed News

 • டெல்லி அரசில் சம்பளம்

  போட பணம் இல்லை..

  டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார். 

  May 31, 2020, 14:10 PM IST
 • தொழிலாளர்களுக்கு எவ்வளவு

  கொடுத்தீர்கள்.. கபில்சிபல் கேள்வி

   

  காங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள்? இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்

  May 31, 2020, 14:07 PM IST
 • தெருவுக்கு வாங்கய்யா..

  யஷ்வந்த் சின்கா ட்விட்

  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

  May 23, 2020, 14:18 PM IST
 • சிறப்பு ரயில்கள் வேண்டாம்..

  மேற்கு வங்கம் கோரிக்கை

  மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது. 

  May 23, 2020, 13:57 PM IST
 • மகாராஷ்டிராவில் 44 ஆயிரம்

  பேருக்கு கொரோனா பாதிப்பு

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.

   

  May 23, 2020, 13:53 PM IST