இரு மொழியில் ரிலீசாகும் ஆக்ஷன் படம் !

Action movie will be released in two languages

by Mari S, Sep 26, 2019, 21:47 PM IST

சுந்தர்.சி இயக்கியுள்ள ஆக்‌ஷன் தீரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஷால், தமன்னா இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் ஆக்‌ஷன். இந்த படத்தில் இருவரும் ராணுவ கமாண்டோவாக நடித்திருக்கின்றனர். இதுவரை காமெடி கலந்த கமர்ஷியல் படமாக எடுத்து வந்த சுந்தர்.சி தற்போது ஆக்ஷன் நிறைந்த ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் சுந்தர்.சி இயக்குனர் துரை இயக்கத்தில் இருட்டு என்னும் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆக்‌ஷன் படத்திற்காக உலகில் பல நாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு நடந்ததாகவும் சுந்தர்.சி கூறியிருக்கிறார்.

சுந்தர்.சி இயக்கிய மற்ற படங்களைவிட இந்த படம் சிறந்த முறையில் எடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் நவம்பர் மாதம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சுந்தர்.சி பாணியில் இந்த படம் ஒரு வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ளதாக பேசப்படுகிறது. மேலும் ரிலீஸ் தேதியை குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

You'r reading இரு மொழியில் ரிலீசாகும் ஆக்ஷன் படம் ! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை