விஜயின் பிகில் படத்திற்கு பிறகு அவர் நடிக்க இருக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது.

கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்க, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சமிபத்தில் நடைப்பெற்றது. அது குறித்து பல சர்ச்சைகளும் ஏற்பட்டது. விஜய் படத்திற்கு வழக்கமாக ஏற்படும் சர்ச்சைகள் தற்போது தொடங்கியுள்ளது என்றும் ஃப்ரீ புரமோஷன் ஆரம்பம் என்று கூறிவருகின்றனர்.
தீபாவளிக்கு பிகில் படத்துடன் போட்டியாக இறங்கும் கைதி படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தான் விஜயின் 64வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறுகிய நேரத்தில் அதீத வளர்ச்சி அடைந்த நடிகர் விஜய் சேதுபதி. தமிழிலே பல படங்களில் நடிக்கும் இவருக்கு தெலுங்கு, இந்தி என வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
விஜய் அளவிற்கு ரசிகர்கள் இல்லையென்றாலும் ஒரு குறுகிய ரசிகர் வட்டத்தை வைத்திருக்கிறார், நடிகர் விஜய்சேதுபதி. மேலும் விஜய்64 படத்தில் இருவரும் இணைந்து நடித்தால் ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம் தான்.














