சினிமா டிக்கெட்டுகள் ஆனலைனில் விற்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் குறிப்பிட்ட தொகை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார் வந்தது. இதையடுத்து அரசே ஆன்லைனில் டிக்கெட் விற்க முன்வரவேண்டும் என்று தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து அரசுடன் திரையலகினர் ஆலோசனை நடத்தினர். அதில் அரசே ஆன் லைனில டிக்கெட் விற்பதென்று பேசப்பட்டிருக்கிறது. இதுகுறித்த இயக்குனர்கள் சங்க நிர்வாகி ஆர்.வி.உதயகுமார் கூறும்போது,'தீபாவளிக்குள் ஆன்லைன் டிக்கெட் கொண்டுவரப்படுமா என்பது குறித்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் கலந்து பேசியுள்ளதாகவும், அடுத்த கட்ட ஆலோனையின் முடிவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார்
ஆன்லைன் டிக்கெட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் திரைத்துறையினருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும், அரசுக்கும் பயன்தரும், மேலும் அம்மா திரைப்பட படப்பிடிப்புத் தள அடிக்கல் நாட்டு விழாவிற்காக முதலமைச்சர் பழனிசாமியிடம் தேதி கேட்கப்பட்டிருக்கிறது. தேதி உறுதியானவுடன் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும்.
அம்மா படப்பிடிப்பு தளத்திற்கான பணிகளை ஜனவரி 31ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதுடன், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி திரைப்படத்தளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.' என இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணியும் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் உருவாகி வருகிறது. அதில் ஜெயலலிதா பெயரில அரங்கம் அமைக்க தமிழக அரசுசார்பில சமீபத்தில் 5 கோடி நிதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.