ரஜினி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்.. வீடு முழுவதும் மலர்களால் அலங்காரம்..

navarathri celebration in rajini house

by Chandru, Oct 7, 2019, 19:39 PM IST

ரஜினிகாந்த்போலவே அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் தெய்வபக்தி நிறைந்தவர்கள். தீபாவளி. பொங்கல் முதல் அனைத்து பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடுவது உண்டு. இந்த ஆண்டும் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ். சவுந்தர்யா ஆகியோர் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந் தனர். ரஜினிலதாவின் உறவினர்கள் விழாவில்
கலந்துகொண்டனர்.

ஐஸ்வர்யா. சவுந்தர்யா தங்களது சிறுவயது தோழிகளான, நடிகர் விஜயகுமாரின் மகளும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரித்தாவையும். நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியான வந்தனாவையும் நவராத் ரியின் 6வது நாளில் தங்களின் வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கொண்டாடினர்.

தோழிகள் நான்கு பேரும் ஜரிகை வேய்ந்த பட்டுப்புடவையில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் ரஜினி. லதாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண் டனர்.
நவராத்திரியை முன்னிட்டு ரஜினிகாந்த் வீடு முழுவதும் மலர்களாலும் , தீபம் ஏற்றியும் அலங்கரித்திருந்தனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை