பிரபுதேவா படத்துக்கு விஜயகாந்த் டைட்டில்.. ஊமை விழிகள் பர்ஸ்ட் லுக் வெளியானது

Prabhu Devas next has been titled Oomai Vizhigal

by Chandru, Oct 8, 2019, 17:29 PM IST

பிரபுதேவா நடிப்பில் இந்த ஆண்டு சார்லி சாப்ளின் 2, தேவி 2 படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் யங் மங் சங் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் தபாங் 3 என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் தனஞ்செயன் தயாரிப்பில் விஎஸ் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஊமை விழிகள் என்ற டைட்டில் வைக்கப்பட் டுள்ளது.

கடந்த 1986ஆம் ஆண்டு விஜயகாந்த், கார்த்திக், நடிப்பில் ஊமைவிழிகள் என்ற ஒரு படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா நடிக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். காஸிப் இசை அமைக்கிறார்.

You'r reading பிரபுதேவா படத்துக்கு விஜயகாந்த் டைட்டில்.. ஊமை விழிகள் பர்ஸ்ட் லுக் வெளியானது Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை