நடிகை அமலா பால் நடித்திருந்த 'ஆடை' படம் அவருக்கு பாராட்டு பெற்றுத்தந்த ளவுக்கு எதிர்ப்புபையும் பெற்றுத்தந்தது அதற்கு காரணம் அப்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்திருந்ததுதான்.
இதுபோன்ற விவகாரமான கதாபாத்திரத்தை இத்துடன் முடித்துக்கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஒரு கவர்ச்சி படத்தில் நடிக்க உள்ளார். நெட்பிலிக்ஸ் இணையத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் வெப்சீரிஸ் பெண்களுக்கு காமத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டைச் சொல்லும் விதமாக கடந்த ஆண்டு வெளியானது.
இந்தியில் வெளியான இதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா நடித்திருந்தனர். கியாரா அத்வானி தனது கணவர் மற்றும் மாமியார் முன்பு சுய இன்பத்தில் ஈடுபட்டு சிக்கிக் கொள்வது போன்ற காட்சியில் நடித்திருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த வெப்சீரீஸை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தை நான்கு வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.
இதில் அமலா பால், கியாரா அத்வானியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சமந்தா நடிப்பில் வெளியான ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி இப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.